Description
Price: ₹600.00
(as of Dec 15, 2024 13:26:11 UTC – Details)
சுதந்திர இந்திய வரலாறு எனும் இந்நூலில், நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை காலப் பாகுபாடு செய்து ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் (பிரதமர்களின்) கீழான 69 ஆண்டு கால வரலாற்றினை, அவர்களின் சாதனைகளை, வெற்றி தோல்விகளை, முக்கிய நிகழ்வுகளை, வெளியுறவுக் கொள்கைகளை வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூலாசிரியர் முனைவர் கா.வெங்கடேசன் பாங்குடன் தந்துள்ளார். இந்திய பொதுப்பணி தேர்வாணையம் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத் திட்டங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்நூல் TNPSC & UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயன்படும். குடிமைப்பணி எனும் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு பயன் தரும் நூல்களை எழுதி வரும் பேராசிரியர் முனைவர் திரு கா.வெங்கடேசன் அவர்களின் கருத்து வண்ணத்தில் வெளி வந்துள்ள மற்றுமொரு அற்புத படைப்புதான் இந்த “சுதந்திர இந்திய வரலாறு” எனும் நூல்”. நழுவவிடாதீர்.